லிட்டில் இந்தியாவிலுள்ள முக்கிய கிளையை மூடும் பிரபல கோமளாஸ் உணவகம்!

Pic: Hawker food

சிங்கப்பூர் சிராங்கூன் (Serangoon) சாலையில் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கிவந்த பிரபல கோமளாஸ் (komalas) உணவகத்தின் கிளை நாளை (மார்ச் 14) முதல் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் திரு. தனசேகர் கூறுகையில், உணவகங்களின் அடித்தளமே சமையல்காரர்கள்தான். வியாபாரம் மற்றும் கூட்டம் இருந்தாலும் சமைப்பதற்கு சமையற்காரர் இல்லாததால் கடையை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

1995ஆம் ஆண்டு வர்த்தகத்தை தொடங்கினோம். 2004ம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து சிரமங்கள் ஏற்பட்டன என்றும், கடந்த சில ஆண்டுகளாக உணவகத்தை நடத்துவது மிகவும் சிரமமாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

Prinsep Street அருகே ஓடும் காரில் ஒருவர் தொங்கி சென்ற வீடியோ வைரல் – பெண் கைது

சிங்கப்பூரில் கோமளாஸ் உணவகத்தின் 12 கிளைகளை நடத்தி வந்தோம். எங்களிடம் சமையற்காரர்களின் பற்றாக்குறை காரணமாக அந்த எண்ணிக்கை 4ஆக குறைந்துவிட்டது. தற்போது இந்தக் கிளையையும் மூடுகிறோம் என்றார்.

அசைவ உணவகங்களைவிட சைவ உணவகங்களில் உணவுத் தெரிவுகள் அதிகம் என்பதால் சமைப்பதற்கு அதிக சமையற்காரர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், எங்களது உணவகத்திற்கு கைதேர்ந்த இந்திய சமையற்காரர்களே பொருத்தமாக இருப்பார்கள் என்றும் பாரம்பரிய சைவ உணவு சமைக்க இங்கு போதிய மனிதவளம் இல்லை என்றும் தனசேகர் குறிப்பிட்டார்.

திறமை வாய்ந்த சிங்கப்பூர் இந்திய சமையல்காரர்கள், இந்திய உணவகங்களில் வேலை பார்ப்பதை விட, நட்சத்திர உணவகங்களில் வேலை செய்யவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எங்களது சில கிளைகளை காப்பாற்றுவதற்காக உணவுத் தெரிவுகளை வெகுவாகக் குறைத்திருக்கிறோம் என்றும், ஓர் அளவிற்கு மேல் அவற்றை குறைத்தால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துவிடும் என்றும் கடை உரிமையாளர் திரு. தனசேகர் குறிப்பிட்டார்.

“சிறந்த வேலை, அதிக சம்பளம்” என்ற ஆசை வார்த்தைக்கு ஏமாந்துபோன தமிழக ஊழியர் – ரூ. 1 லட்சத்தை இழந்த பரிதாபம்