பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க சிங்கப்பூரில் புதிய கண்காணிப்பு குழு.!

Pic: SPF

சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட்டல்கள், வாகனங்களை ஈடுபடுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றை கண்காணிக்கும் குழுவை சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்துச் சங்கம் இணைந்து நேற்று (பிப்.24) தொடங்கியுள்ளது.

போக்குவரத்துத் துறையினருக்கு பாதுகாப்பு மிரட்டல்கள் குறித்த மேம்பட்ட புரிதலை ஏற்படுத்தவும், மிரட்டல்கள் அடையாளம் காணப்பட்டால் எச்சரிக்கை விடுப்பது, சம்பவ இடத்தில் நேரில் களமிறங்கி செயலாற்றுவது போன்றவற்றிக்கு இக்குழு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிர் குடாங் தொழிற்சாலையில் தீ வெடிப்பு… சிங்கப்பூர் வரை தென்பட்ட தீப்பந்து!

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அண்மை ஆண்டுகளில் பயங்கரவாதிகள் வாகனத்தை ஓட்டிவந்து தாக்குதலில் ஈடுபட்டதைக் கருத்தில்கொண்டு இக்குழு அமைக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும், 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதையும் இக்குழு சுட்டிக்காட்டியது.

கடந்த 2015-ல் இருந்து பயங்கரவாதத் தொடர்புடைய நடத்தைக்காக 5 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், காவல்துறை ஏற்கெனவே மற்ற சில துறைகளுக்கான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளது என்றும் மெய்நிகர் வாயிலாக நடைபெற்ற குழுவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்தார்.

பரிசோதனை கட்டுப்பாடு தளர்வு: ஊழியர்கள் மகிழ்ச்சி!!