ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதி!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் இன்று பிரதமர் லீ நாட்டு மக்களிடம் கோவிட்-19 நிலைமை குறித்து உரை நிகழ்த்தினார்.

இதில் வரும் மார்ச் 29 முதல் சிங்கப்பூரில் புதிய விதிமுறைகள் நடப்புக்கு வரும் என்று திரு லீ கூறினார்.

அவை என்னென்ன?

சிங்கப்பூரில் “வெளி இடங்களில் முகக்கவசம் அணிவது விருப்பத் தேர்வாக மாறும்” – பிரதமர் லீ!

கோவிட்-19 பரவும் அபாயத்தைக் குறைக்க முகக்கசம் அணியாத இடங்களில் குழுக்களிடையே ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி அவசியம் என்று திரு லீ கூறினார்.

மேலும் 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் பெரிய நிகழ்வுகள் மற்றும் இடங்களின் திறன் வரம்பு 75 சதவீதமாக உயர்த்தப்படும். தற்போது, உச்ச வரம்பு 50 சதவீதமாக உள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திரு லீ கூறினார், இது தற்போது 50 சதவீதமாக உள்ளது.

மேலும் சமூகக் ஒன்றுகூடலுக்கான குழு அளவு கட்டுப்பாடுகள் ஐந்திலிருந்து 10 நபர்களாக இரட்டிப்பாக்கப்படும்.

வெளியில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமானது என்றாலும், அது உள் இடங்களுக்குள் (indoors) முகக்கவசம் தேவை என்று திரு லீ, கோவிட் -19 நிலைமையை மேம்படுத்துவது குறித்த உரையில் கூறினார்.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் கடை புகுந்து திருட்டு… பொருளாதார பிரச்சனையால் எடுத்த விபரீதம் முடிவு – சிறையில் அடைப்பு