VTL சேவை மீண்டும் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா…?

SG-MY-VTL
Unsplash

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமான தடுப்பூசி பயண பாதையை (VTL) மீண்டும் தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும்.

அதாவது, ஜனவரி 21, 2022-க்கு முன்னதாக 48 மணி நேரத்திற்குள் அதுபற்றி முடிவு செய்யப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 21ஆம் தேதி VTL விமான சேவை மீண்டும் தொடங்கினால் VTL விமான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று வீ கூறினார்.

ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து, கோவிட் -19 சூழலை சிங்கப்பூர் அரசாங்கம் மதிப்பிடுவதைப் பொறுத்து இந்த முடிவு இருக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, டிசம்பர் 23, 2021 முதல் ஜன. 20, 2022 வரை புதிய VTL நிலவழி மற்றும் விமான டிக்கெட்டுகளின் விற்பனையை சிங்கப்பூர் தடை செய்தது.

அதே நேரத்தில், மலேசியாவும் தங்கள் விமான நிறுவனங்களும் பேருந்து நிறுவனங்களுக்கும் டிக்கெட்டுகளை விற்பதை தடை செய்வதாக கூறியது.

முன்னதாகவே VTL டிக்கெட்டுகளை வாங்கிய பயணிகள் இந்தக் காலத்திலும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து குறிவைக்கப்படும் OCBC வங்கி வாடிக்கையாளர்கள்: S$8.5 மில்லியன் பணத்தை ஏமாந்த 469 பேர்