சிங்கப்பூர்-மலேசியா இடையிலான நில வழி பயணம் சில வாரங்களில்..

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நில வழி பயணம் சில வாரங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

அது தடுப்பூசி போட்டுக்கொண்ட பயண ஏற்பாடு போன்ற திட்டத்தின்கீழ் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இரண்டு அண்டை நாடுகளின் 20 மாத பிரிவிவை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு முக்கிய படியாக இருக்கலாம்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே விபத்து: உதவிக்கு ஓடிய பொதுமக்கள் – 5 பேர் மருத்துவமனையில்

கோவிட்-19 அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் கான் கிம் யோங், மலேசியாவுடனான கலந்துரையாடல்கள் சிறப்பாக முன்னேறி வருவதாக திங்கள்கிழமை (நவம்பர் 15) கூறினார்.

அவர் இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் எதையும் கூறாமல் இதனை தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் VTL சிறப்பு ஏற்பாடு நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

அதே போல, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் VTL சிறப்பு ஏற்பாடு பயணத்தை வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் சிங்கப்பூர் தொடங்கவுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி