சிங்கப்பூர்-மலேசியா நில VTL பேருந்து சேவை: 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

LIANHE ZAOBAO

சிங்கப்பூரில் இருந்து ஜொகூர் பாருவிற்கு தனிமை இல்லா நில வழி பயணத்திற்கான பேருந்து டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்று தீர்ந்தன.

இரண்டு பேருந்து சேவை நிறுவனங்களில், ஒன்றின் டிக்கெட்டுகள் சுமார் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

இன்று (நவம்பர் 25) முதல் நாள் டிக்கெட் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

காலை 8 மணிக்கு ​​டிக்கெட்டுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டபோது, ​​அதிகமானோர் டிக்கெட் பெற அந்த போர்ட்டலில் ஒன்று கூடியதால், அதனை சமாளிக்க விர்ச்சுவல் காத்திருப்பு அறைகள் உருவாக்கப்பட்டது.

இரு இணையதளங்களும் தேவைக்கு ஏற்றவாறு செயல்படவில்லை, சில பயனர்கள் முன்பதிவு முறையை அணுகுவதில் சிக்கல்களை சந்தித்ததாக புகாரளித்தனர்.

சிங்கப்பூர்- மலேசியா இடையே வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் காஸ்வே இடையே தடுப்பூசி போடப்பட்ட பயணப் திட்டத்தின்கீழ் (VTL) பயணிக்க முடியும்.

இந்த நில வழி VTL ஏற்பாடு பாதுகாப்பான முறையில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBS & POSB இணைய சேவை முடக்கம்: இயல்பு நிலைக்குத் திரும்பியது!