VTL: முதல் 30 நாட்களுக்கு தேவையான பேருந்து டிக்கெட்டுகள் இன்னும் உள்ளன!

Google Maps

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே நில வழி VTL திட்டத்தின்கீழ் பயணிக்க முதல் 30 நாட்களுக்கு தேவையான பேருந்து டிக்கெட்டுகள் இன்னும் உள்ளன.

இதனை வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று (நவம்பர் 25) இரவு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான ஒரு மாத ஆண்டு இறுதி போனஸ்!

நேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியபோது பயணிகள் நீண்ட காத்திருப்பு மற்றும் டிக்கெட்களை பெறுவதில் சிக்கல்களை சந்தித்தனர், அதனை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, அடுத்த 30 நாட்களுக்கான டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கி அரை மணி நேரத்திற்குள் அதாவது சுமார் 8.20 மணிக்கு விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டது.

அது டிரான்ஸ்டார் டிராவல் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஆகும், நில வழி VTL சேவை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டு பேருந்து நிறுவங்களின் அது ஒன்று.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி , சிங்கப்பூருக்கான டிரான்ஸ்டார் பயண டிக்கெட்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவையும், மலேசியாவிற்கு 70 சதவீத டிக்கெட்டுகள் இன்னும் உள்ளதாகவும் செய்திக்குறிப்பில் MTI தெரிவித்துள்ளது.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு