சிங்கப்பூர்- மலேசியா நில வழி VTL பயணம்: தினமும் 3,000 பயணிகளுக்கு அனுமதி – டிக்கெட் விற்பனை

Google Maps

சிங்கப்பூர்- மலேசியா இடையே வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் காஸ்வே இடையே தடுப்பூசி போடப்பட்ட பயணப் திட்டத்தின்கீழ் (VTL) பயணிக்க முடியும்.

இந்த நில வழி VTL ஏற்பாடு பாதுகாப்பான முறையில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி ஈஸ்ட் பணித்தளத்தில் விபத்து: ரோலர் இயந்திரம் கவிழ்ந்ததில் இந்திய ஊழியர் மரணம்

இந்த நில வழி VTL ஏற்பாட்டின்கீழ் பயணிகள் நியமிக்கப்பட்ட VTL பேருந்து சேவைகள் மூலம் பயணிக்க வேண்டும்.

அது அல்லாமல், தனியார் போக்குவரத்து அல்லது காஸ்வேயின் குறுக்கே நடந்து வரும் பயணிகள், நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், இதில் ஏழு நாள் SHN தனிமை உத்தரவும் அடங்கும்.

தற்போது, ​​காஸ்வே வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு நியமிக்கப்பட்ட பேருந்து சேவைகள் மட்டுமே உள்ளன.

ஒவ்வொரு நியமிக்கப்பட்ட பேருந்தின் அதிகபட்ச திறன், 45 முழு இருக்கைகள் ஆகும்.

இரு நாடுகளுக்கு இடையே தினசரி பயணம் மேற்கொள்ள உள்ள மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 3,000 என கூறப்பட்டுள்ளது.

அதாவது சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு 1,500 பயணிகள், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1,500 பயணிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நவம்பர் 25, காலை 8 மணிக்கு பேருந்து டிக்கெட் விற்பனைக்கு வரும். இந்த டிக்கெட்டுகள் 30 நாட்களுக்கு முன்பே விற்பனைக்கு வெளியிடப்படும்.

சக கட்டுமான ஊழியரின் விரல் பகுதியை கடித்து துப்பிய வெளிநாட்டு ஊழியர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு