சக கட்டுமான ஊழியரின் விரல் பகுதியை கடித்து துப்பிய வெளிநாட்டு ஊழியர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Tuas Avenue 1 dormitory migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் கட்டுமான ஊழியர் ஒருவர் சக ஊழியரின் விரலை கடித்து துப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோகன் கோவிந்தராஜ் (வயது 31) என்ற அந்த ஊழியர் புதன்கிழமை (நவம்பர் 24) ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்திய விமானங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!!

கிராஞ்சி கிரசண்ட் தங்கும் விடுதி

லோகனும் பாதிக்கப்பட்ட 42 வயது ஆடவரும் கிராஞ்சி கிரசண்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த கட்டுமான ஊழியர்கள் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று, பாதிக்கப்பட்ட ஊழியர் நண்பருடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்த போது லோகன் அவர்களுடன் சேர்ந்ததாகவும், அவர் குறைந்தது மூன்று பீர் கேன்களையாவது உட்கொண்டு போதையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

தகராறு

அவர்கள் லாரியில் இருந்தபோது, ​​லோகன் பாதிக்கப்பட்டவரைத் திட்டி, அவரைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லத் தொடங்கியதாகவும், பாதிக்கப்பட்டவர் விடுதியில் மற்ற ஊழியர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார் என்றும் லோகன் கூறியுள்ளார்.

இந்த பொய்களை கூற வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர் லோகனிடம் கூறினார், ஆனால் லோகன் தொடர்ந்து திட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் பின்னர் லாரி கதவைத் திறந்து லோகனை வெளியேறச் சொன்னார், அதற்குப் பிறகு அவர் லோகனை விட்டு விலகி இருக்கவும் விரும்பினார்.

விரலைக் கடித்தார்

ஆனால், அதன் பின்னரும் குடித்துவிட்டு சத்தம் போட்ட லோகனை தள்ளிவிட பாதிக்கப்பட்ட ஊழியர் கையை உயர்த்தினார், அப்போது லோகன் விரலைக் கடித்தார் என கூறப்படுகிறது.

இதனால் விரலில் இருந்து அதிக இரத்தப்போக்கு வெளியேற தொடங்கியது. அதனை அடுத்து, தனது விரலின் ஒரு பகுதியைக் காணவில்லை என்பதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் அதிரிச்சியில் கையைக் கழுவுவதற்காக ஓடினார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

பின்னர், அவர் தனது சக ஊழியர்களிடம் ஆம்புலன்ஸை அழைக்கச் சொன்னார், அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விரலின் துண்டிக்கப்பட்ட பகுதி சம்பவ இடத்திற்கு அருகில் காணப்பட்டது என்றும், ஆனால் மருத்துவர்களால் பாதிக்கப்பட்டவரின் விரலின் விழுந்த பகுதியை மீண்டும் இணைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

லோகன் அடுத்த மாதம் டிசம்பரில் நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.

கோவிட்-19 பாதிக்கப்பட்ட தன்னுடைய 3 வயது குழந்தையுடன் தனிமையில் உள்ள தந்தை!