கோவிட்-19 பாதிக்கப்பட்ட தன்னுடைய 3 வயது குழந்தையுடன் தனிமையில் உள்ள தந்தை!

dodovanson/TikTok

கோவிட்-19 தனிமை உத்தரவின்கீழ் இருக்கும் தந்தை மற்றும் மகன் இருவரும் சமீபத்தில் டிக்டாக்கில் தங்கள் கதையை பகிர்ந்து கொண்டனர்.

“When your three year old kena Covid” என்ற தலைப்பில் ஒன்பது காணொளிகளின் தொடரை தந்தை, டோவன்சன் குவா வெளியிட்டார், இதுவரை சுமார் 300,000 பார்வையாளர்களை அது கடந்துள்ளது.

மதர்ஷிப்பிடம் பேசிய குவா, தனது மகனுக்கு தொற்றுநோய் பாதிப்பு என்ற செய்தியை மகனின் பாலர் பள்ளியில் இருந்து கடந்த நவ. 20 அன்று பெற்றதாகக் கூறினார்.

அடுத்த நாள், அவரது மகன் அஜீல் குவாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனவே, அவரது மனைவி வீட்டிலேயே ART சோதனையை மேற்கொள்ள முடிவு செய்தார், அதில் “பாசிட்டிவ்” முடிவு வந்தது.

“மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதுதான் எங்கள் மனதில் தோன்றிய முதல் விஷயம். அன்று காலை அஜீல் தனது நான்கு மாத சகோதரனை முத்தமிட்டான், மேலும் உணவைப் நாங்கள் பகிர்ந்து சாப்பிட்டோம்.”

அவர் உடனடியாக தனது மகனை PCR சோதனை செய்ய கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, பின்னர் வீடு திரும்பியதும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தத் தொடங்கினர்.

குவா அவர்களின் தனிமைப் பயணத்தின் முதல் TikTok வீடியோவை நவம்பர் 22 அன்று வெளியிட்டார்.

DBS & POSB இணைய சேவை 2வது நாளாக முடங்கியது – வாடிக்கையாளர்கள் விரக்தி

தந்தையும் மகனும் கிளினிக்கில் இருந்தபோது, ​​குவாவின் மனைவியும் உதவியாளரும் அவரது மகனின் அறையைச் சுத்தம் செய்து, படுக்கையறையில் சில அத்தியாவசியப் பொருட்களைக் குவித்தனர்.

கிளினிக்கிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தந்தையும் மகனும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

படுக்கையறையின் வாசலில் நின்று கொண்டு அவரது மகன், “நான் அம்மாவை கட்டிப்பிடிக்க விரும்புகிறேன்” என்று கூறினான்.

அதற்கு குவா வைரஸ் பரவிவிடுமோ என்று பயந்ததால், “கட்டிப்பிடிக்க வேண்டாம்” என்று பதிலளித்தார்.

கதவை மூடும் முன் மகனும் தாயும் “ஐ லவ் யூ” மட்டுமே வாயால் பரிமாறிக் கொண்டனர்.

சிறுவன் வெளியே செல்ல வேண்டும் என்று சொல்லும்போதெல்லாம், சிரிப்புடன் வெளியே செல்ல முடியாததை பற்றி விளக்குவார் குவா.

மகன் தூங்கிய பிறகே, குவா தன்னுடைய வேலையைச் செய்வார்.

மகனுக்கு தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார் தந்தை, நாம் நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழலை சந்திக்கும் போதெல்லாம் முதலில் வந்து நிற்பவர் தந்தையாக தான் இருப்பார் என்பது மிகையாகாது.

தற்போது, எஞ்சிய தனிமை காலத்தை நிறைவேற்ற இருவரும் நேற்று (நவம்பர் 23) ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர்.

சென்னை To சிங்கப்பூர் தினசரி VTL விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம் – “குடும்பங்களை ஒன்றிணைக்கும் அனுமதி” – SIA