DBS & POSB இணைய சேவை 2வது நாளாக முடங்கியது – வாடிக்கையாளர்கள் விரக்தி

(Photo: IE)

DBS வங்கியின் ஐபேங்கிங் (ibanking) இணைய சேவைகள் இன்று (நவம்பர் 24) இரண்டாவது நாளாக முடங்கியது.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் சேவைகளை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதும், புகார் செய்வதும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

சென்னை To சிங்கப்பூர் தினசரி VTL விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம் – “குடும்பங்களை ஒன்றிணைக்கும் அனுமதி” – SIA

DBS மற்றும் POSB டிஜிட்டல் பேங்கிங் சேவைகளில் சிக்கல் மீண்டும் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது, நேற்று செவ்வாய்க்கிழமை காலை பேங்கிங் சேவைகளில் சிக்கல் தொடங்கியது. இரண்டாவது நாளாக அது நீடிக்கிறது.

இன்று அதிகாலையில் சேவைகள் மீண்டும் சரிசெய்யப்பட்டதாகவும், துரதிருஷ்டவசமாக நேற்று மீண்டும் டிஜிட்டல் வங்கிச் சேவையில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் வங்கி புதன்கிழமை காலை 11 மணியளவில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

“இது எங்கள் வாடிக்கையாளர்களில் பலரைப் பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நிலைமையைத் சரிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”

டிஜிட்டல் வங்கிச் சேவைகள் அனைத்தும் இன்று அதிகாலை 2 மணி முதல் சரிசெய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை காலை DBS கூறியதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியானது.

சேவை பாதிப்புக்கான காரணத்தை DBS குறிப்பிடவில்லை.

திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல VTL அல்லாத விமானங்கள்!