சிங்கப்பூர் பிரதமர் அழைப்பின் பேரில், மலேசிய பிரதமர் சிங்கப்பூருக்கு வருகை!

Photo: PM Anwar Ibrahim on Facebook

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பின் பேரில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, இன்று (அக்.29) சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூர்- மலேசியா பிரதமர்களின் 10வது ஓய்விடச் சந்திப்பு எனப்படும் அந்த சந்திப்பில் (10th Singapore-Malaysia Leaders’ Retreat) மலேசிய பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

இந்த ஓய்விடச் சந்திப்பு, கோவிட்- 19- க்கு பிறகு முதன் முதலாக நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

அக்டோபர் 30- ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் சண்முக ரத்தினம் மற்றும் பிரதமர் லீ சியன் லூங் ஆகிய தலைவர்களை மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார். மலேசிய பிரதமருடன், அந்நாட்டின் வெளியுறவுத்துறை, வர்த்தகம், சுற்றுச்சூழல் துறை, முதலீட்டு துறை, உள்துறை, தொழில் முனைவோர் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்களும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.

Singapore Pools டிக்கெட் எடுத்து ஏமாந்த பெண் – $400 மோசடி செய்யப்பட்டதாக பதிவிட்டு விழிப்புணர்வு

சிங்கப்பூர் மற்றும் மலேசியா அமைச்சர்கள் சந்திப்பும் நடைபெறவுள்ளது. இதில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், சிங்கப்பூருக்கு வருவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.