நாடு கடந்த அளவில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள்: சந்தேகத்தில் சிக்கிய 13 பேர் கைது

Singapore tamil news

Singapore: நாடு கடந்த மோசடி கும்பல் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) மற்றும் ராயல் மலேசியா போலீஸ் (RMP) இணைந்து நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் 2 கார் திருட்டு – சாமர்த்தியமாக வேலை பார்த்த 6 பேர் அதிரடி கைது

அவர்கள் கூட்டு பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் SPF செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

மற்ற நான்கு பேரும் சிங்கப்பூரில் வணிக விவகாரத் துறை அதிகாரிகளால் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த மோசடி கும்பல் மூலம் ஏற்பட்ட மொத்த இழப்பு S$1.3 மில்லியனுக்கும் அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஜூரோங் ஈஸ்ட்டில் மரணத்தை ஏற்படுத்திய தீ விபத்து: அதே வீட்டில் மீண்டும் தீ – சோகத்துக்கு மேல் சோகம்