சிங்கப்பூர் செய்திகள்

பிலிபைன்ஸ் எரிமலை வெடிப்பு காரணமாக சிங்கப்பூர் விமான சேவை பாதிப்பு..!

At least 10 Singapore-Manila flights affected as Taal volcano spews lava, ash for third day (PHOTO: EPA-EFE)

பிலிப்பைன்ஸ் தலைநகரின் தெற்கே ஒரு எரிமலை வெடித்துள்ளதை தொடர்ந்தது, சிங்கப்பூர் மற்றும் மணிலா இடையேயான சில விமானங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 14) ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டன.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் (ஜனவரி 14) நிலவரப்படி, சிங்கப்பூர் மற்றும் மணிலா இடையே குறைந்தது 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றியமைக்கப்பட்டன என சாங்கி விமான நிலையத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேர் கைது..!

இதில் ஸ்கூட், ஜெட்ஸ்டார் ஆசியா, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் செபு பசிபிக் ஏர் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தால் எரிமலை வெடிப்பின் காரணமாக சாம்பல் புகை மேகம் பரவியதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் மூடப்பட்டது. பின்னர் திங்களன்று மீண்டும் விமான சேவைகள் ஓரளவு தொடங்கியது.

இதில் திங்களன்று, சிங்கப்பூர் மற்றும் மணிலா இடையே குறைந்தது 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாற்றியமைக்கப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவையொட்டி கண்கவர் பாரம்பரிய தமிழ்க் கலை நிகழ்ச்சிகள்..!

மேலும், சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையே விமானச் சேவைகளை ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.

Related posts