‘சிங்கப்பூர், மணிலா இடையே VTL விமான சேவை’- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூரில் இருந்து இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ‘VTL’ மற்றும் ‘Non- VTL’ விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம்.

‘அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்’- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு குறைந்த கட்டணத்தில் வரும் மார்ச் 11- ஆம் தேதி முதல் VTL விமான சேவை வழங்கப்படும் என்று ஸ்கூட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிங்கப்பூரில் இருந்து மணிலாவுக்கும், மணிலாவில் இருந்து சிங்கப்பூருக்கும் தினசரி விமானங்களை ஸ்கூட் நிறுவனம் (FlyScoot) இயக்க உள்ளது. இது நேரடி விமான சேவை ஆகும்.

‘நட்பில்லா’ நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்துள்ளது ரஷ்யா!

தொடக்க சலுகையாக, மணிலாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல குறைந்தபட்ச பயணக் கட்டணமாக இந்திய மதிப்பில் ரூபாய் 4,449.82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான ‘VTL’ விமான சேவை என்பதால், பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.