வெளிநாட்டு ஆடவரை திருமணம் செய்த சிங்கப்பூர் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாட்டினரை மணக்கும் சிங்கப்பூர் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மறுபுறம் பார்க்கும்போது, சிங்கப்பூர் ஆடவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

பட்ஜெட் 2021: S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு குறைக்கப்படும்…

2019ஆம் ஆண்டில் 1,727 சிங்கப்பூர் பெண்கள் வெளிநாட்டு ஆண்களைக் மணந்துள்ளனர். அது 2009ஆம் ஆண்டில் 1,134ஆக இருந்தது.

அதே போல 2019ஆம் ஆண்டில் 4,426 ஆண்கள், வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். இதை 2009 உடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் குறைவு.

2019ஆம் ஆண்டில், சிங்கப்பூரர்களை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டுப் பெண்களில் சுமார் 97 சதவீத பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

2020 – 2021 மக்கள்தொகை அறிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது, அதன் மூலம் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

வாடகை, கட்டணங்கள் தொடர்பாக வாக்குவாதம்… உடன் வசித்தவரை கொலை செய்த ஆடவர் – வழக்கு விசாரணை