சிங்கப்பூரில் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியின் வானிலை நிலவரம்..!

Singapore Met forecasted rainy
(PHOTO: Zheng Zhangxin)

சிங்கப்பூரில் இந்த மாதத்தில் இரண்டாம் பாதி, முதல் பாதியைப் போலவே ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நவம்பர் 16ம் தேதி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் தீவின் சில பகுதிகளில், குறுகிய கால மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 4 ஆடவர்கள் சம்பந்தப்பட்ட சண்டை காணொளி: உண்மையை வெளியிட்ட ஆடவர்

மேலும், சில நாட்களில் மழையானது மாலை நேரம் வரை நீட்டிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதத்திற்கான மழையானது சராசரியை விட அதிகமாக இருக்கும்.

அதே போல பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 34°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் பாதியில் பெரும்பாலான நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடும்.

பாதுகாப்பு விதி மீறியதன் தொடர்பில் 46 பேர் மீது விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…