சிங்கப்பூரில் 18 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த ஊழியர் செய்த ஒரு தவறு… தமிழ்நாட்டு போலீசிடம் பிடிபட்ட பலே கில்லாடி

Budget 2024 foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வேலைபார்த்து வந்த ஊழியர் ஒருவர் தற்போது தமிழக போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

43 வயதான வீரமுத்து என்பவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர். சிங்கப்பூரில் தாம் வேலை செய்து வருகிறேன் என்றும், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறும் அவர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செய்யப்பட்டது, இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாவட்ட SP அப்பகுதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

போலீசாரிடம் பிடிபட்ட 376 நபர்கள் – தொடரும் விசாரணை

இதனை அடுத்து வீரமுத்து வீட்டிற்கு சென்ற போலீசார் தணிக்கை மேற்கொண்டபோது திடுக்கிடும் உண்மை வெளியானது.

வீரமுத்து சிங்கப்பூரில் வேலை செய்யவில்லை என்றும் , அவர் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஆவின் நிலையத்தில் பணிபுரிவதும் போலீசாருக்கு தெரியவந்தது.

வீரமுத்து பெயரில் போலியான பாஸ்போர்ட் எடுத்து அவருடைய உறவினரான ராஜேஷ் (வயது 36) என்ற ஆடவர் சிங்கப்பூர் நாட்டில் வாகன ஓட்டுநராக வேலை செய்து வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்த ராஜேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் ராஜேஷ் தமிழ்நாடு திரும்பினால் கைது செய்யவும் அனைத்து ஏர்போர்ட்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதை அறியாமல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு திரும்பிய ராஜேஷ் ஏர்போர்ட்டில் பிடிபட்டார்.

விசாரணையில் வீரமுத்துவின் பள்ளி TC, ரேஷன் கார்டு போன்றவற்றை திருடிய ராஜேஷ், அதனை வைத்து போலி பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூரில் 18 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்துள்ளார்.

தன் வாழ்க்கையில் பாதியை போலி பாஸ்போர்ட் மூலம் கழித்த ராஜேஷ் தற்போது தான் பிடிபட்டார்.