சிங்கப்பூரில் கட்டுமான ஊழியரின் மனிதநேய செயல்; குவியும் பாராட்டு.!

Singapore Migrant Worker Help
Pic: FB/The Royal Singapore

The Royal Singapore என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில், ஆடவர் ஒருவர் சாலைச் சந்திப்பின் நடுவில் விழுந்து கிடந்த அதிக எடையுள்ள சரக்கு ஒன்றை எடுப்பதற்குச் சிரமப்படுகிறார்.

சாலை சந்திப்பின் நடுப்பகுதி என்பதால் அங்கு போக்குவரத்து சற்றும் குறையாமல் இருந்தது. அந்நிலையில், அந்த நபர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் நின்றார்.

சிங்கப்பூரில் உள்ள இந்த தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு.!

அப்போது அவரை நோக்கி ஓடிவந்த கட்டுமான ஊழியர் ஒருவர் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார். இருவரும் அந்த எடைகொண்ட சரக்கை தூக்கி நிமிர்த்தியதும், மற்றொருவர் தள்ளுவண்டியுடன் வருகிறார்.

அதன்பின், அந்த சரக்கை தள்ளுவண்டியில் வைத்தவாறு அதனை சாலையிலிருந்து நகர்த்துகின்றனர்.

சாலை சந்திப்பின் நடுவே நடந்த இந்த சம்பவத்தை காரில் இருந்தவாறு லிம் (Lim) என்பவர் பதிவு செய்துள்ளார். பின்னர் லிம் கட்டுமான ஊழியரைப் பாராட்டினார்.

Community Sponsored: 

ஹியட் ஹோங் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழு ஆதரவில் பிரம்மாண்டமான தீபாவளி நிகழ்ச்சி.!

அடையாளம் தெரியாதவருக்கு உதவியதற்கு மிக்க நன்றி. உங்களுடைய இரக்கமான செயல்கள்தான் சிங்கப்பூரைச் சிறப்படையச் செய்கின்றன எனக் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைச் சந்திப்பில், லாரியிலிருந்து விழுந்த சரக்கினை தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 இலவச முகக்கவசங்கள்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…