வெளிநாட்டு ஊழியர்களின் தனிமை, விரக்தி உணர்வுகளை போக்க 24 மணி நேர தொலைபேசி சேவை

Singapore Migrant workers
(Photo: Ministry of ManPower)

உணர்வுபூர்வமான ஆதரவு தேவையுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், வரும் ஜூலை முதல் 24 மணி நேர தொலைபேசி ஹாட்லைன் மூலம் உதவி பெறலாம்.

சிங்கப்பூரில் இதுபோன்ற முதல் ஹாட்லைன் எண், சிங்கப்பூரின் ஆலோசனை சங்கம் மற்றும் ஹெல்த்ஸர்வ் (HealthServe) ஆகிய இலாப நோக்கற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை காலத்தில் சிங்கப்பூர்-தமிழ்நாடு இடையே பறக்க…!

இதில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் சேவை வழங்கப்படும், பின்னர் இறுதியாக பெங்காலி மொழியிலும் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோய், வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்குள் தனிமை, பதட்டம் மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஏப்ரல் முதல் தொலைபேசி அழைப்புகளை கையாளும் விதமாக, சுமார் 20 ஹெல்த் சர்வ் ஊழியர்களுக்கும், 120 தொண்டூழியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின் மிங் அவென்யூவில் தீப்பற்றி எரிந்த கார்!