புலம்பெயர்ந்த ஊழியர்களையே அதிகம் சார்ந்துள்ள கட்டுமானம், கடல் துறை – தரத்தை மேம்படுத்த திட்டம்

(Photo: Today)

சிங்கப்பூரின் கட்டுமானம் மற்றும் கடல்சார் உள்ளிட்ட துறைகள், புலம்பெயர்ந்த ஊழியர்களையே அதிகம் சார்ந்துள்ளது.

அத்தகைய புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான தங்குமிடங்களில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை, சனிக்கிழமையன்று ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தில்’ தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட நேர்காணலில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் விளக்கினார்.

“தங்கும் விடுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன், “ஓமிக்ரான்” பற்றி புரிந்து கொள்ள அதிக நேரம் தேவை”

“விடுதிகள் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி அதன் தரத்தை மேம்படுத்துவது முக்கியமாக இருக்கும்.”

ஊழியர்களின் சொந்த நாடுகளுக்கு ஆலோசனை சேவைகளை அவுட்சோர்ஸ் முறையில் செய்ய முடியுமா என்பதை மனிதவள அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக டாக்டர் டான் கூறினார், இதில் சிறந்த கலாச்சார புரிதல் இருக்கும்.

“அரசாங்கம் இந்த முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த ஊழியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த முழு சமூக முயற்சியும் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஊழியர்களின் தங்கும் இடம், பொது வசதி ஆகியவற்றின் தரத்தை மேம்படுத்த தற்போது அவர்கள் உள்ள விடுதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார்.

சமூக ஈடுபாடு, பொழுதுபோக்கு நிலையம் ஆகிவற்றை மேம்படுத்தி புலம்பெயர்ந்த ஊழியர்களின் சமூக நலனை மேம்படுத்த MOM ஊக்குவிக்கும் என்றார்.

சிங்கப்பூரில் சுமார் 20 வருடங்கள் பணிபுரிந்த வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த வீடு கனவு நிறைவேறியது!!