இந்திய அமைச்சர்களைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் ஆல்வின் டான்!

இந்திய அமைச்சர்களைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் ஆல்வின் டான்!
Photo: Minister Alvin Tan

 

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஆகஸ்ட் 26- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு ஜி20 நாடுகளின் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சட்டத்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மீனாக்ஷி லேகி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளைத் தவிர, ஓமன், சிங்கப்பூர், நெதர்லாந்து, நைஜீரியா, வங்கதேசம், எகிப்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

Concorde ஷாப்பிங் மால் கலகம்: சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட அஸ்வைன்

சிங்கப்பூர் சார்பில் வர்த்தகம், தொழில்துறை, கலாச்சாரம், இளைஞர் நலத்துறையின் இணையமைச்சர் ஆல்வின் டான், இந்த ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டிற்கு பிறகு ஜி20 அமைச்சர்களுடன் இணைந்து மதிய உணவை அருந்தினார். பாரம்பரிய இந்திய உணவு விருந்தில் பரிமாறப்பட்டது.

மீண்டும் ஹாட் டவல் சேவை.. அனைத்து பயணிகளுக்கும் தொடங்கப்படும் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

அமைச்சர்கள் மாநாட்டிற்கிடையே, இந்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், மீனாக்ஷி லேகி மற்றும் மற்ற நாடுகளின் அமைச்சர்களைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கு சென்று உலக புகழ்பெற்ற கங்கை ஆரத்தியைக் கண்டுக்களித்தார். இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூர் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.