சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Minister for Sustainability and the Environment, Grace Fu

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூவுக்கு (Grace Fu, Minister for Sustainability and the Environment) கொரோனா நோய்த்தோற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவது முறையாக துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் லீ – உச்சி மாநாட்டின் குறிக்கோள் என்ன?

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் (Copenhagen) நகரில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில், சிங்கப்பூர் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, சிங்கப்பூர் அரசு சார்பில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கோபன்ஹேகனுக்கு சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் அடுத்த ஆபத்து – நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!

இந்த நிலையில், அமைச்சர் கிரேஸ் ஃபூ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) இருந்து வந்த பிறகு கோபன்ஹேகனில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் பருவநிலை மாற்றம் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் ஜூம் (Zoom) என்ற காணொளி மூலம் கலந்துக் கொண்டேன். லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் எனக்கு இருந்தன. மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், சிங்கப்பூர் திரும்புவதற்கான பயண தேதியை ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.