அமைச்சர் இந்திராணி ராஜாவுக்கு கொரோனா நோய்த்தொற்று!

Photo: Minister Indranee Rajah Official Facebook Page

சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரான இந்திராணி ராஜா தான் சுயமாக ஏஆர்டி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தனக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிகரெட் துண்டால் நேர்ந்த சேதம்… சிக்கிய ஊழியர் – சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த கோர்ட்

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “தனது குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதால், நேற்று (03/03/2022) மதியம் ஏஆர்டி (ART) பரிசோதனையில் செய்ததில், பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனவே, நெறிமுறை 2- ன் படி, நான் குணமடையும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

‘பினாங்கு, பாலி உள்ளிட்ட நகரங்களுக்கு ‘VTL’ விரிவுப்படுத்தப்படுகிறது’- முழுமையான தகவல்!

நல்ல வேளை தொற்று அறிகுறிகள் லேசாக உள்ளது; கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளேன். சில காரணங்களால் நான் தொடர்ந்து பசியுடன் உணர்கிறேன். தொற்று காரணமாக, கரையோரப் பூந்தோட்டங்கள் நடைபெறும் சகுரா திருவிழாவில் (Sakura Floral Display) கலந்துக் கொள்ள இயலவில்லை. என்னால் உங்களுடன் இருக்க முடியவில்லை. சகுரா திருவிழா மற்றும் அழகான வசந்த பூக்களை அனுபவிக்கவும். மற்றவர்களையும் பார்வையிட ஊக்குவிப்பேன். அடுத்த வாரம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் என்று நம்புகிறேன். அனைவரையும் விரைவில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.