பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்த சிங்கப்பூர் அமைச்சர்!

Video Crop Image

சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை எஸ்.ஈஸ்வரன், தனது குடும்பத்துடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

மூன்று வண்ணங்களில் ‘டிக்’… ட்விட்டரில் புதிய மாற்றம்!

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 17- ஆம் தேதி அன்று காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்பு, தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு குடும்பத்துடன் சென்ற அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், அரண்மனையைச் சுற்றிப் பார்த்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், “நான் பலமுறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். பத்மநாபபுரம் அரண்மனைக்கு முதல்முறையாக வந்துள்ளேன். அரண்மனை மிகவும் அழகாக உள்ளது; அரண்மனையை நன்றாகப் பராமரித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.