ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசிய அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Singapore minister vivian balakrishnan Official Facebook Page

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடன் (Sheikh Abdullah Bin Zayed Al Nahyan, UAE Minister of Foreign Affairs and International Cooperation) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று (28/01/2022) தொலைபேசியில் பேசினார்.

இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். ஷேக் அப்துல்லா எனக்கு பழைய, பல வருடங்களாகத் தெரிந்த நண்பர்.

கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விவாதித்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நியாயப்படுத்த முடியாத தாக்குதல்களுக்கு சிங்கப்பூரின் கடும் கண்டனத்தை நான் மீண்டும் தெரிவித்தேன். ஐக்கிய அரபு அமீரகம் மத்திய கிழக்கில் எங்களின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், மேலும் நாங்கள் பல பகுதிகளில் ஒத்துழைக்கிறோம்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சீனா செல்கிறார் சிங்கப்பூர் அதிபர்!

மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் (SM Teo Chee Hean) மற்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ (Minister Grace Fu) ஆகியோர் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்ததைச் சுட்டியக்காட்டிய அமைச்சர், ஷேக் அப்துல்லாவுக்கு சிங்கப்பூரில் மீண்டும் விருந்தளிக்க காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.