சுறுசுறுப்பான சுட்டிக் குழந்தையை வைத்துக்கொண்டு இப்படிதான் வேலையைத் திட்டமிட வேண்டும் ! – சிங்கப்பூரைச் சேர்ந்த தாயின் திட்டப்பணி

singapore mom work busy spend time with bay grocery shopping

சிங்கப்பூரில் ஒரு குழந்தைக்கு தாயான பணிபுரியும் பெண்,ஒவ்வொரு நாளும் வீட்டை ஒழுங்காக வைத்திருப்பது, ஒரு குழந்தையைப் பராமரிப்பது மற்றும் முழுநேர வேலை செய்வது போன்றவற்றிற்கு நேரத்தை எவ்வாறு திட்டமிட்டு செலவிடுவது என்ற வழிமுறையை கண்டுபிடித்ததாகவும் அவற்றை மற்ற பெற்றோர்களுக்கு பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தினசரி காலையில் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு 10 முதல் 20 நிமிடங்களை உடற்பயிற்சி செய்வதற்கு செலவிட வேண்டும்.இது போன்ற சிறிய உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யமுடியும் என்று கூறினார்.எளிய உபகரணங்கள் மட்டுமே தேவைப்படும்.மேலும்,குழந்தையையும் கவனித்துக்கொள்ள முடியும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்திப்புகளை வார இறுதியில் திட்டமிடாமல் வாரநாட்களிலேயே பயண நேரத்தை மிச்சப்படுத்த அலுவலகம் அல்லது வீட்டிற்கு அருகில் நண்பர்களுடன் சந்திப்புகளை திட்டமிட வேண்டும்.

இதனால் வார இறுதி நாட்களை இன்னும் கொஞ்சம் விடுவிக்கிறது.வாரநாட்களில் குடும்பங்களுடனான சந்திப்பின்போது இரவு உணவை அவர்களின் இடத்திலேயே திட்டமிடுவதன் மூலம் சமைத்தல்,சுத்தம் செய்தல் போன்றவற்றில் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

வாரநாட்களில் தனது சுறுசுறுப்பான குழந்தைக்குத் தேவையான டயாப்பர்,பசியில் இருக்கும் கணவருக்கு உணவு வழங்கத் தேவையான மளிகைப் பொருட்கள் போன்றவைத் தீர்ந்து போகும் நிலையிலிருந்தால் உடனடியாக பல்பொருள் அங்காடியை நோக்கி விரைய வேண்டியிருக்கும்.

அங்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.எனவே, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொள்வது சிறந்தது என்று அவர் கூறியுள்ளார்.குழந்தையுடன் பொன்னான நேரத்தைச் செலவிட திட்டமிட்டு பணிபுரிய வேண்டும் என்பது இந்தப் பெண் கூறுவதிலிருந்து தெரிய வருகிறது.