சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூரில் பணிபுரியும் விமான ஊழியர்கள் இங்கும், வெளிநாடுகளிலும் வழக்கமான நடவடிக்கைகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து COVID-19 பணிக்குழு கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், விமான நிலைய ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டும் போதும் என தெரிவித்தார்.

மேலும், தொற்று ஆபத்து அதிகமுள்ள சூழலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் காலக்கிரம முறைப்படியான COVID-19 பரிசோதனையை செய்துகொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 75 சதவிகித தமிழர்கள் மாடா உழைக்கிறாங்க! மீதி உள்ள 25 சதவீதம் பேரின் நிலை என்ன? அவங்க லெவலே வேற!

விமான நிலையத்தில் இனிமேல் தனித்தனி தடுப்புகள் இருக்காது என்றும், விமான பயணிகள் இடைவழிப் பயணிகள் கூடத்தில் தாராளமாக நடமாடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வருகை தரும் பயணிகளில் COVID-19 நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக செலுத்தவேண்டிய தொகை தொடர்பான கொள்கை மாற்றங்களையும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் கூறுகையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதிதாரர்கள் மருத்துவமனைகள் மற்றும் சமூக சிகிச்சை நிலையங்களில் COVID-19 சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் சிகிச்சைக்கான செலவை ஏற்கவேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!