சிங்கப்பூரில் புதிதாக 709 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் நேற்று (08/12/2021) மதியம் 12.00 PM மணி நிலவரப்படி, புதிதாக 709 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 699 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 679 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 20 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 10 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,297 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் பாதியாக குறைந்துள்ள கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளின் விலைகள்

கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 774 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 784 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 139 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 50 பேர் ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இவர்களில் 10 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

‘தாய்லாந்து, கம்போடியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஜெட்ஸ்டார் ஏசியா அறிவிப்பு!

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 1,113 பேர் ஒரேநாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.