சிங்கப்பூரில் மேலும் 454 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

racist-passenger-india-Singapore
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூரில் நேற்று (10/12/2021) மதியம் 12.00 மணி நிலவரப்படி, மேலும் 454 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 440 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 436 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 14 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,72,433 ஆக உயர்ந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் இணையதள சேவை தொடக்கம்!

கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 783 ஆக அதிகரித்துள்ளது.

அதிஉயரிய கௌரவமிக்க சிங்கப்பூர் S Pass வாங்க பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்!

கொரோனா பாதிப்பு காரணமாக 637 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 120 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 44 பேர் ஐ.சி.யூ. பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 4 பேரின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 1,017 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.