ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலிருந்து சாங்கி விமான நிலையம் வரை புதிய பாதை.. டைனோசர் கண்காட்சிகளுடன்!

Singapore new cycle track
New cycling track from East Coast Park to Changi Airport opens. (Photo Credit : Alamy)

சிங்கப்பூரில் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலிருந்து சாங்கி விமான நிலையம் வரை புதிதாக சைக்கிளோட்டிகளுக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை பூங்காவை இணைக்கும் இந்த பாதையில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஜாகிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சிராங்கூன் ரோட்டில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் – 5 பேர் கைது..!

இந்த 3.5 கி.மீ பாதையில் உள்ள முக்கிய சிறப்பு, பாதையில் 20க்கும் மேற்பட்ட டைனோசர் மாடல்களின் நிரந்தர வெளிப்புற காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதையில் சைக்கிள் நிறுத்தங்கள், வாடகை சைக்கிள்கள், புதிய கஃபே போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையக் குழு (CAG) கூறுகையில், இந்த புதிய இணைப்பு விமான நிலையத்திற்கு செல்வதற்கான மாற்று வழியையும், மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் முடிவடைவதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது, இது தேசிய பூங்காக்கள் வாரியம் மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து துறை அமைச்சர் Ong Ye Kung அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருந்து சைக்கிள் ஓட்டி இந்த பாதையை திறந்துவைத்தார்.

Photo: Darryl Laiu

இந்த புதிய பாதையில் டைனோசர் கண்காட்சிகளுடன் 1 கி.மீ நுழைவது இலவசம்.

வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான முன்பதிவு, ஞாயிற்றுக்கிழமை முதல்  https://playpass.changiairport.com/#/jurassicmile2020 என்ற இணையதளத்தில் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு S$3,000 மானியம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…