சிங்கப்பூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு S$3,000 மானியம்..!

grant parents children born COVID-19
(PHOTO: AFP/Sutanta Aditya)

COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு S$3,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை வளர்க்க, தம்பதிகளுக்கு உதவுவதில் குழந்தை ஆதரவு மானியம் கூடுதல் ஆதரவை வழங்கும் என்று பிரதமர் அலுவலகத்தின் (PMO) தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவு (NPTD) ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தற்காலிக தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை – MOH

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஆதரவை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

COVID-19 தொற்றுநோய் சிலருக்கு பெற்றோர் ஆகும் எண்ணங்களை ஒத்திவைக்க வழிவகுத்தது என்ற கருத்தைப் பெற்ற பின்னர் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோய் காலகட்டம், திருமணம் செய்து குடும்பத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு எளிதானது அல்ல.

மேலும், இது நாட்டின் ஒட்டுமொத்த கருவள விகிதத்திற்கும் முக்கியம் என்று PMOஇன் அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.

திருமணம் செய்து குடும்பங்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற சிங்கப்பூரர்களை ஆதரிப்பது ஒரு முக்கிய தேசிய முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மானியத்தில் தேவை குறித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதே போல குடும்பங்களின் நிதி நெருக்கடியை குறைக்கும் மேலும் சில ஆதரவுத் திட்டங்களும் நடப்பில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட இந்த நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…