சிங்கப்பூரில் தற்காலிக தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை – MOH

Singapore dormitories covid19
No new Covid-19 cases detected in purpose-built dorms for the first time since March 28. (Photo Credit : Nuria Ling/Today

சிங்கப்பூரில் கடந்த மார்ச் 28 முதல் முதன் முறையாக ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதிகளில் (Purpose-built dorms) புதிய COVID-19 சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) இரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமைச்சகம் கூறுகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சமூக அளவில் புதிய தொற்றுநோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு குறிப்பிட்ட இந்த நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.!

இருப்பினும், வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் 10 புதிய COVID-19 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதாகவும், இது சிங்கப்பூரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 57,859ஆகக் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிதாக பாதிக்கப்பட்ட 10 நபர்களில் ஒருவர் தங்கும் விடுதியை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் என்றும், பரவலைத் தடுக்க அவரை தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்ற 9 பேர் சிங்கப்பூரை சேர்ந்த நிரந்தரவாசிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்த 10 நபருக்கும் வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பு (SHN) விதிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை அன்று ஏழு பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக 57,660 நோயாளிகள் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

தீவிர சிகிச்சை பிரிவில், ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட மொத்தம் 37 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர்.

COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவுநேர கிளினிக்குகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…