வெளிநாட்டவர்கள் அடையாள அட்டைகளில் புதிய M வரிசை FIN எண்கள் அறிமுகம்.!

work permit salary increase
Pic: MOM

சிங்கப்பூரில் வருகின்ற ஜனவரி 01, 2022 முதல், M எனும் எழுத்தைக் கொண்ட புதிய வெளிநாட்டு அடையாள எண் (FIN) தொடரை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் (ICA) ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது

சிங்கப்பூரில் வேலை செய்யும், படிக்கும் அல்லது வசிக்கும் வெளிநாட்டவருக்கு வெளிநாட்டு அடையாள எண்கள் வழங்கப்படுகின்றன. தற்போது உள்ள
F, G தொடர்களைப் போல, எழுத்திற்குப் பிறகு 7 எண்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு வழங்கப்படும் அடையாள எண்ணைப் போலவே வெளிநாட்டு அடையாள எண்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமானது.

புக்கிட் பாத்தோக் பேருந்து விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது

அந்த நபர் சிங்கப்பூரை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் அல்லது இறந்து போனால் அந்த எண் மற்றொரு நபருக்கு வழங்கப்படமாட்டாது. காலப்போக்கில் ஒரு தொடரில் இடம்பெறக்கூடிய எண்கள் தீர்ந்துவிடும்.

சிங்கப்பூரில் நீண்டகாலமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை பதிவு செய்து அடையாளம் காண ICA மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்கள் தங்கள் கடமைகளை செய்ய அனுமதிக்க புதிய FIN தொடரை அறிமுகம் செய்யப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

தற்போது F மற்றும் G வரிசையில் வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் M வரிசை அறிமுகத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வருகின்ற 2022 ஜனவரி 1ம் தேதிக்குள் புதிய தொடர்களை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து அரசு நிறுவனங்களும் அவற்றின் அமைப்புகளுக்கு தேவையான மேம்பாடுகளை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது ஊழியர்களிடமிருந்து FIN தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வணிக செயல்முறைகளின் ஒரு பகுதியாக தங்கள் அமைப்புகளில் தேவையான மாற்றங்களை செய்து வணிகங்களுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அறிவுறுத்தப்படுவதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் இந்திய நாட்டவரை காப்பாற்ற, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உதவிய 3 பேருக்கு SCDF விருது