எந்த மதத்தையும் சாராத பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கடவுள் இருப்பதாக நம்புகின்றனர் – ஆய்வு

singapore-no-religion-believe-karma-god
File Image

எந்த மதத்தையும் சாராத பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கடவுள் இருப்பதாக நம்புகின்றனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல, அவர்கள் கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள், உயிரிழந்த சொந்தங்களுக்காக சடங்குகள் செய்வது மற்றும் கர்மா ஆகியவற்றை நம்புவதாகவும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க Pew Research Center நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“வெளிநாட்டவர்கள் இதை மறதியாக கூட செய்யாதீர்கள்” – அபராத எச்சரிக்கை பெற்ற வெளிநாட்டவரின் எச்சரிக்கை

62 சதவீத மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 65 சதவீதம் பேர் கர்மா இருப்பதாகக் கருதுகின்றனர்.

எந்த மதத்தையும் சாராத சிங்கப்பூரர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் மதம் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில் பௌத்தம், இஸ்லாம் மற்றும் பிற மத நம்பிக்கை பற்றிய விரிவான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த கணக்கெடுப்பு வெளியானது.

இந்த ஆய்வு 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் செப். 4 வரை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்