சிங்கப்பூரில் வரும் நாட்களின் மழை அளவு குறைவாக இருக்கும்

singapore November 2022 weather Met Service
Photo: Mothership

சிங்கப்பூரில் இந்த நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தை விட, அடுத்த இரண்டு வாரங்களில் மழை குறைவாக இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் பிற்பகல் நேரங்களில் குறுகிய அளவில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

வெறும் $1 க்கு டிக்கெட் வாங்கி, $5.68மி Toto ஜாக்பாட் பரிசை தட்டிச் சென்ற அதிஷ்டசாலி நபர்

மேலும் சில நாட்களில் அது மாலை வரை நீடிக்கலாம் என்றும் அது கணித்துள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில், நவம்பர் மாதத்துக்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரியை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அதே போல, பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை எட்டும் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஸ்கூட் விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதில் தாமதம்… பயணிகள் செய்த வேலையால் அவதி