சுமார் 1,500 ஊழியர்களை பணியமர்த்த உள்ள சிங்கப்பூரின் OCBC வங்கி!

Pic: Aaron Low/TODAY

வர்த்தக வளர்ச்சி, மின்னிலக்க உருமாற்றம் போன்றவற்றை விரைவுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 1,500 தொழில்நுட்ப ஊழியர்களை பணி அமர்த்த உள்ளதாக OCBC வங்கி அறிவித்துள்ளது.

இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், தரவு விஞ்ஞானிகள், APP Develpoers ஆகியோர் வேலையில் அமர்த்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை

இதுகுறித்து OCBC வங்கியின் தலைமை செயலாக்க அதிகாரி லிம் கியாங் டோங் கூறுகையில், மலேசியா, சீனா, ஹாங்காங், இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் OCBC வாங்கி செயல்பட்டு வருகிறது. புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவோரில் சிலர் இந்த நாடுகளுக்கும் அனுப்பப்படுவர் என்றும், ஆனால் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் வேலை செய்வர் என்றும் கூறினார்.

OCBC வங்கி கடந்த ஆண்டு செப்டம்பரில், 150 தொழில்நுட்ப ஊழியர்களையும், அத்துடன் 140 பெண்களையும் பணியில் அமர்த்தப் போவதாக கூறியிருந்தது. தொழில்நுட்பத் திறன் கொண்ட ஊழியர்களை பணியில் அமர்த்த நிறுவனங்கள் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது.

மேலும், மற்ற பிரிவுகளில் உள்ள தனது ஊழியர்கள் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற OCBC வங்கி ஏற்பாடுகள் செய்துள்ளதுடன், அவர்கள் வங்கியின் தொழில்நுட்பக் குழுக்களில் சேரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் “எல்லைகளை திறக்க போறோம்” என அறிவித்தது தான் போதும்… டிராவல் ஏஜென்சிகளில் குவியும் டிக்கெட் புக்கிங்!