“சிங்கப்பூரில் வயதானவர்கள் மூன்று பேரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force official twitter page

சிங்கப்பூரில் வயதான மூன்று முதியவர்களை காணவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அக்டோபர் 13- ஆம் தேதி அன்று மதியம் 02.00 மணி முதல் 83 வயது மூதாட்டியைக் காணவில்லை. இவர் கடைசியாக பிளாக் 32 பாலம் சாலையில் (Blk 32 Balam Rd) தென்பட்டுள்ளார். மேலும், இளஞ்சிவப்பு நிற பிளவுஸ் மற்றும் பழுப்பு நிற பேண்ட் அணிந்திருந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் கிடைத்தாலோ அலல்து யாரேனும் பார்த்தாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

67 வயது சீன மூதாட்டியை செப்டம்பர் மாதம் 28- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணி முதல் காணவில்லை. பிளாக் 351 ஆங் மோ கியோ தெரு (Blk 351 Ang Mo Kio St 32) 32- ல் கடைசியாக இருந்துள்ளார். வெள்ளை நிறத்தில் இளஞ்சிவப்பு மலர் ஸ்லீவ்லெஸ் பைஜாமாவுடன், பேண்ட் அணிந்திருந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய கைத்தறி குறித்த சிறப்பு பேஷன் ஷோ, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகம்!

63 வயது முதியவர் அக்டோபர் 13- ஆம் தேதி அன்று மதியம் 12.00 மணி முதல் காணவில்லை. கடைசியாக, 171 ட்ராஸ் தெருவில் (171 Tras St) காணப்பட்டுள்ளார். நீண்ட கை சட்டை (long sleeve shirt) மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்துள்ளார். இவரை பற்றி தகவல் கிடைத்ததால் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.