சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்பு!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து பங்கேற்பு!
Photo: Singapore Open Badminton 2023

 

சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கத்தில் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று (ஜூன் 06) காலை தொடங்கியது. வரும் ஜூன் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில், இந்தியா, மலேசியா, ஜப்பான், தைவான், டென்மார்க், சீனா, அயர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

குறிப்பாக, பிரபல இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையும், உலக பேட்மிண்டன் சாம்பியனுமான ஜப்பான் சேர்ந்த வீராங்கனையுமான அகானே யமாகுச்சியை எதிர்கொள்கிறார். நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள பி.வி.சிந்து, சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.

ஜப்பான் வீராங்கனையுடன் 23 முறை மோதியுள்ள பி.வி.சிந்து 14 முறை வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல், சாய்னா நேவால், கிடாம்பி, ப்ரன்னோய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் பங்கேற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானம்.. சோதனையில் லாக் செய்த போலீஸ்

ஆண்கள் ஒன்றையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை சுமார் 7 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களுக்கு ரூபாய் 49 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.