வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஏன்? – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

Pic: TODAY

சிங்கப்பூரில் நாளை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வீடு வாங்குவது,வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம்,மருத்துவமனையில் படுக்கை வசதி போன்றவை குறித்து விவாதம் செய்யப்பட உள்ளன.

சுமார் 85 கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த விவாதத்தில் பாதுகாவல் அதிகாரிகளின் பணியிட வசதிகள்,வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளத்தை கொடுக்காமல் இருப்பது போன்றவை இடம்பெறும்.

எதிர்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயிடம் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்டுவதற்கான செலவு குறித்த தெளிவான விவரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார்.

வீடுகளைப் பெறுவதில் இருக்கும் சிக்கல்கள்,படிப்படியாகச் சம்பளத்தை உயர்த்தும் திட்டத்தால் வாடகை வீட்டுக்குத் தகுதி பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா போன்ற கேள்விகளும் எழுப்பப்படும்.