‘சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர்’- பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

File Photo

 

 

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் (PrimeMinisterOffice, Singapore) இன்று (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சியா கியான் பெங்கை (Seah Kian Peng) நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்க பிரதமர் லீ சியன் லூங் உத்தேசித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர்'- பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Photo: Seah Kian Peng

61 வயதான சியா கியன் பெங், கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தியரை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரும் சிங்கப்பூர் போலீசார்

நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் சியா கியன் பெங், தற்போது மரின் பரெட் குழுத்தொகுதியின் (Marine Parade GRC) நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

தெம்பனிஸ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹூவியுடன் தகாத உறவில் இருந்த டான் சுவான் ஜின் தனது நாடாளுமன்ற சபாநயாகர் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சிப் பதவி என அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.