‘சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர், எம்.பி. ராஜினாமா!’- காரணம் என்ன தெரியுமா?

'சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர், எம்.பி. ராஜினாமா!'- காரணம் என்ன தெரியுமா?
File Photo

 

சிங்கப்பூரில் உள்ள தெம்பனிஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் செங் லி ஹுய் (வயது 47). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதேபோல், சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தவர் டான் சுவான் ஜின் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இருவரும் தொடர்ந்து தகாத உறவில் இருந்து வந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM

இந்த விவகாரம் சிங்கப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செங் லி ஹுய் (Cheng Li Hui), தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும், மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், அதற்கான கடிதத்தை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, டான் சுவாங் ஜின் (Tan Chuan Jin) தனது சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தனது குடும்பத்தில் கவனம் செலுத்த உள்ளதால், அரசியல் உள்பட அனைத்து பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் போல சென்னையிலும்.. வேற லெவல் பிளான்

இருவரது ராஜினாமாவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், “மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையைப் பேணுவதற்காக, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருப்பதை அறிந்து கடந்த பிப்ரவரி மாதமே நிறுத்த சொன்னேன். அதன் பிறகும் அவர்களது உறவு தொடர்ந்தது. இந்த நிலையில், தான் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.