இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!

இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!
Photo: Singapore in India

 

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் உச்சி மாநாடு, கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி தொடங்கியது.

சிங்கப்பூருக்கு வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்த உச்சி மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சீ கியான் பெங் (Singapore Parliament Speaker Seah Kian Peng) கலந்து கொண்டார்.

இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!
Photo: Singapore in India

அவரை இந்திய நாடாளுமன்ற ஓம் பிர்லா வரவேற்றார். அதைத் தொடர்ந்து, இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இஸ்ரேலில் இருந்து தென் கொரிய இராணுவ விமானம் மூலம் 6 சிங்கப்பூரர்கள் மீட்பு

இக்கூட்டத்தில், இந்தியா- சிங்கப்பூர் இடையேயான சிறந்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினர். அத்துடன், நாடாளுமன்றம் அலுவல்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர்.

இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!
Photo: Singapore in India

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற வளாகம் மற்றும் பழைய நாடாளுமன்ற வளாகத்தையும் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களுடன் பார்வையிட்டார்.

இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!
Photo: Singapore in India

அக்டோபர் 14- ஆம் தேதி வரை நடந்த மாநாட்டில், இடை இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

டிப்பர் லாரியில் இருந்து சரிந்த உலோகக் குழாய்கள்.. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார்.