சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ART Kit – காரணம் என்ன.?

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

ART எனப்படும் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை கருவிகள் எந்த அளவு ஆற்றலுடன் செயல்படும் என்பதை அறிந்துகொள்ள சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வரும் பயணிகளிடம் ART செயல் திறனைப் பரிசோதிக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சகம் நடத்தும் ஆய்வின் ஒரு பகுதியாக, கடந்த சில வாரங்களாக சிங்கப்பூருக்கு வருகை தரும் பல பயணிகளுக்கு
ART சுயபரிசோதனை கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் VTL பயணப்பாதை திட்டத்தின் கீழ் இஸ்தான்புல்லிருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணி ஒருவருக்கு ART பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டது.

இலவசம்!! இலவசம்!! காதலர் தின பரிசாக உணவு வகைகளை இலவசமாக வழங்கும் சிங்கப்பூர் உணவகம் – வெளிநாட்டு ஊழியருக்கும் இலவசம்!

அந்த நபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட ART பரிசோதனை செயல்திறனைக் கண்காணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சுகாதார அமைச்சகம் ஆய்வை நடத்தி வருகிறது. ஓமிக்ரான் பரவும் சூழலில் ART பயன்பாட்டை புரிந்துகொள்வதற்காக இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்றும், இது எங்களுடையே பரிசோதனை கொள்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும், உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், வீடு அல்லது குறிப்பிட்ட தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்ததும் அதே நாளில், ART பரிசோதனை செய்து முடிவுகளை தாளில் அச்சிடப்பட்டுள்ள QR குறியீட்டின் இணைப்பு மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ART பரிசோதனைக் கருவி இலவசமாக வழங்கப்பட்டாலும், PCR சோதனையை செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” – நாட்டு மக்களை அழைக்கும் சிங்கப்பூர்!