சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியைப் பிடித்த அதிகாரிகள்…. விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியைப் பிடித்த அதிகாரிகள்.... விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல்!
Photo: Kolkata Customs

 

கொல்கத்தாவிற்கு வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், சுங்கத்துறை சட்டம் 104 பிரிவின் கீழ் அந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!

கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வந்த விமானியை சுங்கவரிச் செலுத்தாத காரணத்தால், விலையுயர்ந்த கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர், ரோலக்ஸ், MB&F, Mad, Purnell, Greubel Forsey, Louis Vuitton, Richard Mille, Audemars Piguet உள்ளிட்ட பல விலை உயர்ந்த கடிகாரங்களைக் கண்டிபிடித்தனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திமோர்- லெஸ்ட்டேவுக்கு பயணம்!

அந்த விலை உயர்ந்த கடிகாரங்களுக்கு மொத்தமாக 38.5% சுங்கவரி செலுத்தாத காரணத்தால், அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 30 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.