சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்தப் பயணிகள்….சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்தப் பயணிகள்....சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
Photo: Customs Officers

 

வெளிநாடுகளில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், தங்கம் போதைப்பொருட்களைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலத்தின் கீழ் தவறான செயலை செய்த வெளிநாட்டவர்.. S$2,500 அபாரதம் விதிப்பு

அந்த வகையில், ஆகஸ்ட் 24- ஆம் தேதி அன்று ஸ்கூட் (Flyscoot) ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மூன்று பயணிகள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த சுமார் 4.1 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஜாபர் அலி, சாகுல் ஹமீத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர், அதைத் தொடர்ந்து, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொரு பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2.47 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.