உலகின் மதிப்பு மிகுந்த பாஸ்போர்ட்… சிங்கப்பூர் மீண்டும் முதலிடம் – 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்

singapore passport most powerful 2023

உலகின் மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) ஜூலை 18, 2023 அன்று வெளியிட்ட தரவரிசையின்படி, சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தை பிடித்தது.

மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய தரவரிசையில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகியவை கூட்டாக இரண்டாவது இடத்தில் உள்ளன.

அந்நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் நபர்கள் 190 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் .

5 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்

அதே 3ஆம் இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை உள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் – கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்