“ஊழியர்களின் இடத்திற்கு அருகே வேலை”… சிங்கப்பூரை வேலை செய்ய உகந்த நாடாக கொண்டுவர திட்டம்!

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரை வேலை வாய்ப்புகள் நிறைந்த நாடாகவும், அதற்கான சூழலை கொண்டுவரவும் தேவையான உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில், ஊழியர்களின் வீட்டுக்கு அருகே வேலை இடங்களை கொண்டுவருவது, சிறிய குத்தகை கொண்ட வாடகை இடங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி

சுமார் 200 பேருடன் கலந்துரையாடப்பட்ட பிறகு இந்த சிறந்த உத்திகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது, குறைவான கார்கள், இயற்கையுடன் ஒன்றிய வேலை இடங்கள் உள்ளிட்ட சிங்கப்பூரின் எதிர்கால வேலை இடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

அடுத்த 10 ஆண்டுகளில் சம்மந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தோசித்து சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு தேவையான உத்திகள் வகுக்கப்படும் என ஆணையம் கூறியது.

அதன் தலைமை நிர்வாகி லிம் எங் ஹுவி­வுடன், இதுபற்றி கலந்தோசிக்க தேசிய வளர்ச்சி 2 ஆம் அமைச்சர் இந்திராணி ராஜா தலைமை ஏற்றார்.

அப்போது, நீண்ட காலம் குறித்து திட்டமிடுவது சிங்கப்பூரின் சிறப்புகளில் ஒன்று என்றும் அவர் கூறினார்.

கட்டிட பராமரிப்பு பணியின்போது 16வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்