சிங்கப்பூரில் தட்டு கழுவ $3,500 சம்பளம்: இருந்தும் தட்டிக்கழிப்பது ஏன்? எத்தனை பேர் இதுக்காக ஏங்குறாங்க?

15 hotels Covid violation
Pic: Urban Redevelopment Authority

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகம் தட்டு கழுவ ஒரு ஊழியருக்கு $3,500 மாதச் சம்பளம் அளிக்கிறது.

ஆனாலும் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம். அதனால் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளது. சம்பளத்தை அதிகரித்த பிறகும், வேலைக்கு ஆள் அமர்த்த கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் எடுத்துள்ளது.

பெரும்பாலும் சிங்கப்பூர் மக்கள் யாரும் தட்டு கழுவும் வேலை பார்க்க முன்வருவதில்லை. இதனால் வெளிநாட்டு ஊழியர்களை வைத்தே அது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

கொரோனா சூழ்நிலையால் பல வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். இதோடு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையும் சிங்கப்பூர் அரசாங்கம் முடக்கியது.

இதனால் உணவு நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்க திண்டாடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க சில உணவகங்கள் தட்டு கழுவும் பணியை மற்ற நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றன.

8 மணி நேரம் தட்டு கழுவ,  ஒவ்வொரு ஊழியருக்கும் $3,800லிருந்து $4,000 மாதச் சம்பளம் அளிக்கின்றன.

சில கடிமான வேலை பளு கொண்ட பணிகளுக்கு இதனை விட ஊதியம் குறைவாக உள்ள நிலையில், ஏன் இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற சந்தேகம் முதலாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.