சீனாவின் தவறான நடவடிக்கை – உக்ரைன் போரில் அமெரிக்காவுடன் சீனா ஏன் நிற்கவில்லை? – நியூயார்க்கில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்

pm lee said conflict us china relations strained due to russia ukraine war asia pacific

உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பை அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் எதிர்த்து பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளன.இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கருத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடக்கும் போரை ஜனநாயகம் மற்றும் எதேச்சதிகாரங்களுக்கு இடையே நடக்கும் போராக பார்ப்பது சிக்கல் மேல் சிக்கல் உண்டாக்கி,பிற நாடுகள் ரஷ்யாவை கண்டிப்பது சீனா ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்குகிறது என்று பிரதமர் கூறினார்.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நியூயார்க்கில் The Wall Street Journal குழுவுடன் உரையாடிய பிரதமர் ” உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான கண்டனம் , நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பிராந்திய ஒருமைப்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் என்பதை உணர்ந்தால், சீனா கூட பிற நாடுகளின் கண்டனத்தை எதிர்க்காது.அதை வலுவாக ஆதரிக்கும் ” என்று கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீயின் அமர்வின் உரை, அவரது அலுவலகத்தால் இன்று (April10) வெளியிடப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக ரஷ்யாவுடன் “No Limits ” என்ற நட்புறவு ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட்டது. இதனால் சீனா மேற்கத்திய நாடுகளில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

“ ஏன் சீனா தன்னுடன் நிற்கவில்லை என்று அமெரிக்கா கேட்கிறது.சீனா தவறான முகாமிற்குள் இருப்பது உலக நாடுகளின் அமைதியை பாதுகாப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது ” என்று பிரதமர் கூறினார்.

ஐநா சபையில் ஒவ்வொரு முறை நாட்டின் இறையாண்மை சுதந்திரம் பற்றி விவாதம் நடைபெறும் போது ஒருமைப்பாடு கொள்கைகளுக்காக சிங்கப்பூர் எழுந்து நிற்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.